இவ்வருட இறுதியில் ரன்பீர் கபூர் ஆலியா பட் திருமணம் !

ரன்பீர் கபூரும் ஆலியா பட்டும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வருகின்றனர். ஆனால் திருமணம் பற்றிய தகவலேதும் கூறாமல் மௌனம் காத்து வந்தனர். இந்நிலையில் இந்த வருட இறுதியில் அவர்களுக்கு திருமணம் என்று பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இருவரும் இணைந்து நடிக்கும் படம் பிரம்மாஸ்திர இந்தாண்டு டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது. இந்த படம் வெளிவந்த பின்பு இவர்களின் திருமணம் பற்றிய அதிகார தகவல் வெளியாகுமென தெரிகிறது. இவர்களின் திருமணம் கடந்த ஆண்டே நடக்க வேண்டிஇருந்தது. ரன்பீர் கபூரின் தந்தை ரிஷிகபூர் புற்றுநோய் சிகிச்சை பெற்றுவந்த காரணத்தால் திருமணம் தள்ளிப்போய்விட்டது.