இஸ்பெட் ராஜாவும் இதய ராணியும் படத்தின் பாடல் வெளியீடு!

ஹரிஷ் கல்யாண் பியர் பிரேமா காதல் திரைப்படத்திற்கு பிறகு ஹீரோவாக நடிக்கும் படம் இஸ்பெட் ராஜாவும் இதய ராணியும், ஷில்பா மஞ்சுநாத் கதாநாயகியாக நடிக்கிறார். ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் மா கா பா ஆனந்த், பால சரவணன் ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த நிலையில், காதல் ரொமாண்டிக் கதையை மையப்படுத்திய இப்படத்தில் அனிருத் பாடிய கண்ணமா உன்ன மனசுல நினைக்கிறேன் என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.