இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படம் பற்றி – ஹரிஷ் கல்யாண்!

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் – ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் உருவாகி இருக்கும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படம் வருகிற மார்ச் 15-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. படம் பற்றி ஹரிஷ் கல்யாண் பேசும் போது, இந்த படம் காதலை மற்றும் புரிதலை பற்றிய படம். இன்றைய தலைமுறையினரை கவரும் வகையில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் இடம்பெறும் சில சம்பவங்கள் அனைவரது வாழ்விலும், சந்தித்ததாக இருக்கும். ஒளிப்பதிவாளர் கவின் வண்ணங்களை எண்ணத்தில் கலந்து ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி கதை சொன்ன தருணமே இந்த கதாபாத்திரம் எனக்கு மிகவும் சவாலான கதாபாத்திரம் என்று தெரிந்தே தேர்வு செய்தேன். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் எனக்கொரு நிரந்தரமான இடத்தை பெற்றுத் தரும் என நம்புவதாக தெரிவித்தார்.