உங்களுக்கும் தல 59 முக்கியமான படமாக அமையும் – ஷ்ரத்தாவுக்கு டாப்சி வாழ்த்து !

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் தல 59 படத்தை வரும் கோடை விடுமுறைக்கே வெளியிட செய்வதற்காக பணிகளை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள். இந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்கில் டாப்ஸி கதாநாயகியாக நடித்தார் படம் பெரிய வெற்றியை பெற்று தந்தது, இந்தியின் முன்னணி கதாநாயகியாகவும் மாறினார்.  இந்தியில் அமிதாப் பச்சன் நடித்திருந்த கதாபாத்திரத்தில் அஜித் நடிக்கிறார். டாப்சி நடித்த வேடத்தில் ஷ்ரத்தா கதாநாயகியாக நடிக்கிறார். தான் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கும் ஷ்ரத்தாவுக்கு, டாப்சி வாழ்த்து தெரிவித்துள்ளார்.