உடற்பயிற்சியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் ரகுல்பிரீத் சிங் !

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகர்கள் ஜோடியாக நடிக்கிறார் ரகுல்பிரீத் சிங். சினிமா வாழ்க்கை குறித்து அவர் கூறியதாவது, கதாநாயகியாக பல மொழி படங்களில் நடித்து ஓய்வில்லாமல் இருக்கிறேன். பல நகரங்களில் ஆரோக்கிய உடற்பயிற்சி கூடம் நடத்துகிறேன். கொஞ்சம் ஓய்வு கிடைத்தாலும் உடற்பயிற்சி கூடம் சம்பந்தமான தொழிலை கவனித்துக்கொள்கிறேன். நான் இருக்கும் சினிமாவில் உடற்பயிற்சி முக்கியம். உடற்பயிற்சி கூடம் நடத்துவதில் வியாபார நோக்கம் சிறிதளவு இருந்தாலும், அதன் பின்னால் உடற்பயிற்சியில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற சமூக அக்கறையும் இருக்கிறது. எதிர்காலத்தில் ஆரோக்கியமான உணவுகள் வழங்கும் தொழில் செய்யவும் ஆசை உள்ளது.