உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்த அஜித் !

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அஜித்தின் அடுத்த படத்தையும் எச்.வினோத் இயக்குகிறார். போனிகபூர் தயாரிக்கிறார். இது ஆக்‌ஷன் கலந்த கமர்ஷியல் படமாக உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் இறுதியில் பூஜையுடன் தொடங்குகிறது. படத்தில் நடிக்கும் இதர நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது. ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் அஜித் பைக் ரேஸராக நடிக்கிறார். இதற்காக அஜித் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டது. அதனை உறுதிபடுத்தும் வகையில், அஜித் மெலிந்த தோற்றத்தில் காட்சியளிக்கும் புகைப்படம் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.