உடல் எடையைக் குறைத்த சிம்பு – ரசிகர்களுக்காக வெளியிட்ட புகைப்படம்

நீண்ட இடைவெளிக்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த செக்கச் சிவந்த வானம் திரைப்படம் ஒரு நல்ல கம் பேக் ஆக அமைந்தது. ஆனால், அந்த படத்திற்கு பின்னர் வெளியான வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மோசமான விமர்சனத்தைப் பெற்றது. அப்படத்தில் சிம்பு குண்டான தோற்றத்தில் இருந்ததாக சொல்லி  கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானார். இதனால் உடல் எடையை குறைக்க லண்டன் புறப்பட்ட சிம்பு அங்கேயே தங்கி சிகிச்சை எடுத்து உடல் எடை குறைந்து காணப்படுகிறாா். நேற்று லண்டனில் இருந்து சென்னை திரும்பிய அவர் சமீபத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். அதில் சிம்பு மெலிந்து தோற்றமளிக்கிறார். தற்போது சிம்புவும் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார்.