உடல் நலக்குறைவு காரணமாக நடிகை விஜயலட்சுமி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

தமிழ் மற்றும் கன்னடப் படங்களில் நடித்தவர் நடிகை விஜயலட்சுமி. தமிழில் பிரெண்ட்ஸ் படத்தில் விஜய்க்கு தங்கையாக, சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர். பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவுக்கு அண்ணியாக நடித்து இருந்தார். தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாததால் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த விஜயலட்சுமி, சமீபகாலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவருக்கு உயர் ரத்த அழுத்த பிரச்சினை இருந்து வந்தது. அவர் தீவிர சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள மல்லையா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். விஜயலட்சுமி சகோதரி இதுபற்றி கூறியதாவது:- விஜயலட்சமி ஒரு நடிகரை திருமணம் செய்துகொள்ளப் போவதாக அறிவித்தார் அந்த திருமணம் 2007-ம் ஆண்டு நடந்து இருக்க வேண்டியது. ஆனால் திடீர் என்று ரத்தாகிவிட்டது இதன் காரணமாக விஜயலட்சுமிக்கு நேற்று ரத்த அழுத்தம் அதிகமானதால் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளோம். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது சிகிச்சைக்கு சினிமா துறையினர் உதவ வேண்டும்‘ இவ்வாறு அவர் கூறினார்.