உண்மை கண்டறியும் சோதனைக்கு தயார் – சின்மயி சவால்!

பாடகி சின்மயி நிகழ்ச்சிக்கு பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-  மீடூ விவகாரத்தில் சட்டத்தில் மாற்றம் வேண்டும். அரசு சார்பில் குழு அமைக்கப்படும் என்றார்கள், இதுவரை அமைக்கப்படவில்லை, அரசிடம் இருந்து எந்த ஒரு பதிலும் இல்லை. பாதிக்கப்பட்டோர் பலர் வழக்குபதிவு செய்தும் நடவடிக்கை இல்லை. ‘‘சட்டம் எங்களை கைவிட்டுவிட்ட நிலையில் தான் இருக்கிறோம். டப்பிங் யூனியனில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளேன்’. இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக சின்மயி கூறும் புகார்கள் உண்மையாக இருந்தால் ஏன் சட்டப்படி புகார் அளிக்கவில்லை என டுவிட்டரில் சிலர் விமர்சித்தனர். வழக்கறிஞர் ஒருவர் ’உண்மை கண்டறியும் சோதனை தான் ஒரே வழி’ என்று கூற ஆத்திரமடைந்த சின்மயி, ’நான் தயார். மீடியாவை வர சொல்லுங்கள். ஒரே நேரத்தில் இருவருக்கும் நடக்கட்டும். அப்போது உண்மை தெரியும். கணவரை தவிர நீ யாரிடம் செல்கிறாய் என என்னை கேள்வி கேட்பதை விட்டுவிட்டு, ஆம்பளையாக இருந்தால் ‘உண்மை கண்டறியும் சோதனைக்கு ஏற்பாடு செய்துவிட்டு கால் செய்யுங்கள்’. இவ்வாறு அவர் கூறினார்.