உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட சூர்யாவின் அடுத்த படம்

சூர்யா தமிழ் சினிமாவில் பல தரமான படங்களில் நடித்தவர். இவர் கடந்த சில வருடங்களாக ஒரு வெற்றியை கொடுப்பதற்கு கடுமையாக போராடி வருகின்றார். அந்த விதத்தில் தற்போது இவரின் சூரரைப் போற்று படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இப்படத்தை தொடர்ந்து சூர்யா அருவா, வாடிவாசல் ஆகிய படங்களில் நடிக்கவுள்ளார். இதற்கிடையிலேயே கூட்டத்தில் ஒருவன் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில்படத்தின் கதை என்ன என்பதன் விவரம் தெரிய வந்துள்ளது, இப்படம் பழங்குடி மக்கள் பற்றி கதையாம். ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படத்தை எடுக்கவுள்ளதாக சில தகவல்கள் கசிந்துள்ளது.