உண்மை சம்பவ அடிப்படையில் தமிழில் வருகிறது தண்டுபாளையா !

வெங்கட் மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக வெங்கட் கதை, திரைக்கதை எழுதி தயாரித்திருக்கும் படம் தண்டுபாளையம். சுமன்ரங்கநாத், முமைத்கான், பேனர்ஜி, D.S.ராவ், ராக்லைன் சுதாகர், புல்லட் சோமு, அருண் பச்சன், சஞ்சீவ்குமார், ஜீவா, விட்டல், சினேகா, ரிச்சா சாஸ்திரி, சந்தோஷ்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் மேடை நாடக கலைஞர்கள் என்பது கூடுதல் சிறப்பு. இவர்களுடன் தயாரிப்பாளர் வெங்கட் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒளிப்பதிவு – R.கிரி, வசனம் – கிருஷ்ணமூர்த்தி, இசை – ஆனந்த் ராஜா விக்ரம், பாடல்கள் – மோகன்ராஜ், கலை – ஆனந்த் குமார், ஸ்டண்ட் – சந்துரு, நடனம் – பாபா பாஸ்கர், எடிட்டிங் – பாபு ஸ்ரீவஸ்தா, பிரீத்தி மோகன், தயாரிப்பு – வெங்கட், இயக்கம் – K.T. நாயக். படத்தை ஸ்ரீ லட்சுமிஜோதி கிரியேஷன்ஸ் ஏ.என்.பாலாஜி உலகமெங்கு டிசம்பர் மாதம் வெளியிடுகிறார். படம் பற்றி இயக்குனர் K.T.நாயக் கூறியதாவது, 'இது முழுக்க முழுக்க உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம். 1990களில் கர்நாடகா மாநிலத்தில் உள்ள தண்டுபாளையம் என்ற ஊரில் இருந்து உருவான ஒரு கொள்ளை கும்பல் நாளடைவில் ஆசியாவிலேயே அதிக திருட்டு, கொலை, கற்பழிப்பு போன்ற சம்பவங்களை நிகழ்த்திய கொடூர கும்பலாக மாறியது. அந்த கேங்கின் உண்மைச் சம்பவங்களை திரட்டி இந்த திரைக்கதையை உருவாக்கி உள்ளோம். இந்த தண்டுபாளையம் ஏற்கனவே தெலுங்கு, கன்னடா ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது. படம் வருகிற டிசம்பர் மாதம் தமிழ், மலையாளம், ஹிந்தி, போஜ்பூரி, மராட்டி என பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.