உதட்டு முத்த காட்சியில் நடிப்பது அவ்வளவு சுலபமல்ல – விஜய் தேவர்கொண்டா !

நடிப்பில் பாரத் கம்மா இயக்கியுள்ள தெலுங்கு படம் ‘டியர் காம்ரேட்’. இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். கீதா கோவிந்தம் படத்திற்கு மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு இப்படம் உருவாகியுள்ளதால் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. கீதா கோவிந்தம் படத்தில் விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் நெருக்கமாக நடித்திருந்தார்கள். அவர்களது கெமிஸ்ட்ரி நன்றாக இருப்பதாக எல்லோராலும் பேசப்பட்டது. இப்போது டியர் காம்ரேட் படத்திலும் ஜோடி சேர்ந்துள்ளார்கள். முத்தக்காட்சியிலும் நடித்துள்ளார்கள். முத்தக்காட்சி எத்தனை டேக் ஆனது எனப் பத்திரிக்கையாளர்கள் கேட்க அதற்கு கோபமடைந்தார் விஜய் தேவர்கொண்டா. லிப்லாக் காட்சிகள் எடுப்பது அத்தனை சுலபமில்லை. அதற்கு நிறைய பேரின் உழைப்பு இருக்கிறது. வெளியிலிருந்து பார்ப்பது போன்று அத்தனை சுலபமில்லை. விளையாட்டுக் காரியமல்ல நாங்கள் அதை புரபஷனலாக செய்கிறோம். அதைச் செய்பவருக்கு பெண்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கை ஒன்று வெளியில் இருக்கிறது அதனை கொச்சைப்படுத்தாதீர்கள் என்றார்.