உதயநிதி ஸ்டாலினுக்கும் நயன்தாராவுக்கும் என்ன உறவு? வம்பிழுக்கும் ராதாரவி !
நேற்று முதல்வர் எடப்பாடி முன்னிலையில் அதிமுகவில் தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்ட ராதாரவி ஒரு நடிகைக்காக தன்னை சஸ்பெண்ட் செய்ததை தன்னால் ஜீரணிக்க முடியவில்லை என்று சொன்னதோடு நிறுத்திக்கொள்ளாமல் சிலருக்கு சிலரோடு இருக்கும் உறவுமுறைகளைப் பற்றித் தெரிந்துகொள்ளாமல் கமெண்ட் அடித்ததால் தான் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக பட்டவர்த்தனமாகத் தெரிவித்தார். அவர் குறிப்பிட்டது உதய நிதி ஸ்டாலினையும் நயன் தாராவையும் இணைத்துதான் என்பது மிக வெளிப்படையாகவே தெரிந்தது. ‘இது கதிர்வேலன் காதல்’,’நண்பேண்டா’ ஆகிய இரு படங்களில் உதயநிதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்றாவது முறையாக அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்ட பிறகு கூடுதல் தெம்புடன் இருக்கும் நடிகர் ராதாரவி, நடிகர் விஷால் தொடங்கி கருணாஸ் வழியாக உதயநிதி ஸ்டாலின் வரை வரிசை கட்டி வம்பு வளர்த்துக்கொண்டிருக்கிறார்.