உதய நிதிக்கு ஜோடியாகும் மேகா ஆகாஷ் !

பேட்ட, பூமராங், வந்தா ராஜாவாதான் வருவேன் படங்களை தொடர்ந்து கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷுடன் நடித்த என்னை நோக்கி பாயும் தோட்டாவில் நடித்திருப்பவர் மேகா ஆகாஷ். இப்படங்களை தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் உதய நிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடிக்கிறார். சைக்கோ, கண்ணை நம்பாதே, ஏஞ்சல் படங்களில் நடித்து வரும் உதய நிதிக்கு பல கதாநாயகிகளின் பெயர்கள் பரிந்துரைக்க பட்ட நிலையில் இறுதியில் மேகா ஆகாஷ் தேர்ந்தெடுக்கபட்டுள்ளார்.