உத்தம வில்லன் படத்திற்கும் ஞானவேல் ராஜாவுக்கும் எந்த சம்மந்தமுமில்லை – கமல் விளக்கம் !

தயாரிப்பாளர் சங்கத்தில் கமல் மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா புகார் கொடுத்திருந்தார். உத்தம வில்லன் படத்திற்காக கமலுக்கு ரூ.10 கோடி கொடுத்ததாக சொல்லியிருக்கிறார். இந்த புகாருக்கு கமல், அதற்கான விளக்கத்தை எங்கள் வக்கீல் நோட்டீஸ் மூலம் அங்கு அனுப்புவார்கள். உத்தமவில்லன் படத்திற்கும், ஞானவேல் ராஜாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எங்களுக்கு சம்பந்தம் திருப்பதி பிரதர்ஸ் என்று சொல்லக்கூடிய அந்த சகோதரர்கள் தான். அவர்களிடம் தான் அதைக் கேட்க வேண்டும். மேலும், அப்பொழுது இந்த புகார் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்விக்கு, அதற்கு அதில் இருந்தே தெரியவில்லையா. பின்னணி என்னவாக இருக்கும் என்பது தெரியாது. முன்னணியில் இருப்பவர்கள் சரியில்லை. காலம் பதில் சொல்லும். நீதி பதில் சொல்லும் என்றார்.