உனக்கு வயசே ஆகாதா என ஜெனிலியா ஜெயம் ரவியை பார்த்து கேட்ட ஜெனிலியா !

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவியின் 24வது படமாக உருவாகின்றது ‘கோமாளி’ திரைப்படம். இசாரி கே கணேஷ் தயாரிக்கும் இந்த படத்தில் காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, கேஎஸ் ரவிக்குமார், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்தில் ஜெயம்ரவி ஆதிவாசி, பிரிட்டிஷ் கால அடிமை என 9 வேடங்களில் நடிக்கின்றார். தற்போது கோமாளி பட பள்ளி மாணவனாக ஜெயம் ரவி இருக்கும் போஸ்டரைப் பார்த்து ஜெனிலியா என்ன ஜெயம்ரவி இது. உனக்கு வயதே ஆகாதா… உன்னைப் பார்க்க பதின்ம வயது பையனைப் போலவே இருக்கு. வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் ஜெயம் ரவியுடன் சேர்ந்து ஜெனிலியா நடித்திருந்தார் எனது குறிப்பிடத்தக்கது.