உயர்ந்த மனிதன்’ படப்பிடிப்பில் அமிதாப் பச்சன், எஸ்.ஜே.சூர்யா

கள்வனின் காதலி’ படத்தை இயக்கிய தமிழ்வாணன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘உயர்ந்த மனிதன்’. சிவாஜி கணேசன் படத் தலைப்பான இதில், எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடிக்கிறார். பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பில் அமிதாப் பச்சனுடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் எஸ்.ஜே.சூர்யா. “என் வாழ்க்கையின் சந்தோஷமான தருணம் இது, நான் ஒருபோதும் காணாத கனவை நினைவாக்கிக் கொடுத்த கடவுள், அப்பா, அம்மாவுக்கு நன்றி. துணை இயக்குநராகத் திரையுலகில் கால் பதித்த காலத்தில் இருந்தே எனக்கு அமிதாப் சார் மீது அளவில்லாத பிரியம். அவருடன் இணைந்து நடிப்பதுதான் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வரம்”