உயர் போலீஸ் அதிகாரியாக சசிகுமாருடன் இணைந்து நடிக்கும் சரத்குமார்!

சரத்குமார், சசிகுமார் ஆகிய 2 பேரும் இணைந்து நடிக்கும் படத்தில், சரத் குமார் மும்பை நகரின் உயர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். நேர்மையும், துணிச்சலும் மிகுந்த போலீஸ் அதிகாரியாக சரத்குமார் வருகிறார். படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. படத்தில், 2 கதாநாயகிகள் இடம் பெறு கிறார்கள். ஒரு கதாநாயகி மும்பையை சேர்ந்த நைனா கங்கூலி, இன்னொருவர் முடிவாகவில்லை. முக்கிய வேடத்தில், பாரதிராஜா நடிக்கிறார். ‘சலீம்’ படத்தை இயக்கிய வி.நிர்மல்குமார் டைரக்டு செய்கிறார். பி.கே.ராம்மோகன் தயாரிக்கிறார். படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. தொடர்ந்து மும்பையில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.