உருவத்தை வைத்து கேலி செய்தனர் – விழா மேடையிலேயே கதறி அழுத கீர்த்தி பாண்டியன் !

ஹரீஷ் ராம் இயக்கத்தில் தர்ஷன், கீர்த்தி பாண்டியன், தீனா உள்ளிட்டோர் நடித்துள்ளப் படம் தும்பா. முழுக்க முழுக்க டாப்ஸ்லிப் உள்ளிட்ட வனப் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இந்த படத்தில், புலி, குரங்கு, காட்டெருமை, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் கிராபிக்ஸ் வடிவில் இடம்பெற்றுள்ளன. குழந்தைகளை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள தும்பா திரைப்படம் வரும் 21ம் தேதி ரிலீசாகிறது. இதையொட்டி படக்குழு நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்பொழுது படத்தின் நாயகி கீர்த்தி, படப்பிடிப்பின் போது நிகழ்ந்த சம்பவங்களை பகிர்ந்துகொண்டார். தன்னுடன் பணியாற்றிய ஒவ்வொருவருக்கும் நன்றி கூறினார். அப்போது, படத்தின் ஹீரோயின் கீர்த்தி பாண்டியன் மேடையிலேயே அழுதார். நான் நடிக்க வேண்டும் என முடிவு செய்ததில் இருந்து, நிறைய கதைகள் கேட்டிருக்கிறேன். நிறைய கதைகளை நான் நிராகரித்திருக்கிறேன். நிறைய இயக்குனர்கள் என்னை நிராகரித்துள்ளனர். என்னை நிராகரிக்க அவர்கள் கூறிய காரணம் எனது உருவம் தான். ஒல்லியாக இருக்கிறாய். கருப்பு நிறமாக இருக்கிறாய் எனக் கூறி என்னை நிராகரித்தனர். இதனால் நான் மனமுடைந்து போனேன். பெரிய இயக்குனர்கள் பலர் என்னை நிராகரித்தனர். ஆனால் ஹரீஷ் தான் என் உருவத்தை பற்றி எதுவும் குறை கூறாமல் என்னை ஹீரோயினாக தேர்வு செய்தார். பிறகு இயக்குனர் தான் எனக்கு தன்னம்பிக்கை கொடுத்து நடிக்க வைத்தார். அவருக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன், என கீர்த்தி கூறினார்.