உலகநாயகன் கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 பட தற்போதைய நிலவரம் என்ன?

உலகநாயகன் கமல்ஹாசன் இயக்கி நடித்த படம் 'விஸ்வரூபம்'. இப்படம் ரசிகர்களிடம் எப்படி ஒரு வரவேற்பை பெற்றிருந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அதேசமயம் படமும் வெளியாவதற்கு பல பிரச்சனைகளை சந்தித்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி பின் சில காரணங்களால் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அண்மையில் தான் மறுபடியும் பட வேலைகள் தொடங்கியிருக்கிறது.  தற்போது புதுப் போஸ்டரை சமீபத்தில் கமல்ஹாசன் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் படத்தின் படப்பிடிப்புகள் துருக்கியில் நடந்து வருவதாகவும் இன்னும் 2 அல்லது 3 நாட்களில் படப்பிடிப்பு முடிந்து படக்குழு சென்னை திரும்புவார்கள் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வந்துள்ளது.