Cine Bits
உலகெங்கும் வசூலை வரிக்குவிக்கும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் !

உலகளவில், மார்வெல்ஸ் சூப்பர் ஹீரோ திரைப்பட ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருக்கும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம் நேற்று சீனாவில் வெளியானது. இத்திரைப்படம் அங்கு முதல் நாளிலேயே 107 மில்லியன் டாலர்கள் வசூலித்துள்ளது. இந்திய மதிப்பில் இது 750 கோடி ரூபாயாகும். இது தான் சீனாவில் முதல் நாளில் ஒரு திரைப்படம் பெற்றிருக்கும் அதிகப்பட்ச வசூலாகும். இத்திரைப்படம் இந்தியாவில் இன்று வெளியானது. முதல் நாள் காட்சிகளுக்கான அனைத்து டிக்கெட்களும் இந்தியாவில் விற்றுத்தீர்ந்த நிலையில் இத்திரைப்படம் இந்திய பாக்ஸ் ஆஃபிசில் புதிய சாதனைப்படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.