‘எங்கள் வீடு பிள்ளை’ சிவகார்த்திகேயன் படத்தலைப்பிற்கு எதிர்ப்பு !

தமிழ் பட உலகில் தலைப்பை பயன்படுத்துவது தொடர்பாக அடிக்கடி மோதல்கள் நடக்கின்றன. சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்தின் தலைப்பான ‘ஹீரோ’ என்ற பெயரை விஜய் தேவரகொண்டா நடிக்கும் படத்துக்கும் சூட்டியுள்ளதால் பிரச்சினை எழுந்துள்ளது. பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்துக்கு ‘எங்க வீட்டுப்பிள்ளை’ என்ற தலைப்பை வைக்க திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு எம்.ஜி.ஆர். நடித்த ‘எங்க வீட்டுப்பிள்ளை’ படத்தை தயாரித்த பழம்பெரும் பட நிறுவனமாக விஜயா புரொடக்‌ஷன்ஸ் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. எம்.ஜி.ஆர். நடித்த எங்க வீட்டுப்பிள்ளை உள்பட தங்கள் நிறுவனம் தயாரித்துள்ள அனைத்து படங்களின் தலைப்புகளின், உரிமைகளையும் இதுவரை வேறு நபர்களுக்கோ அல்லது வேறு நிறுவனங்களுக்கோ வழங்கவில்லை. இதுகுறித்து பல ஆண்டுகளுக்கு முன்பே கடிதம் மூலம் தலைப்பு உரிமை காப்பு கோரி நமது சங்கங்களுக்கு கடிதம் கொடுத்துள்ளோம். அதே நிலை தொடர்கிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்” இவ்வாறாக அந்த பட நிறுவனம் சார்பில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.