எஜமானருக்காக கொலையாளிகளை பழிவாங்கும் நாய்!

பாலிவுட் இயக்குனரும், தயாரிப்பாளருமான கே.சி.பொகாடியா தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் இயக்கி உள்ள படம், ராக்கி தி ரிவென்ஞ். ஸ்ரீகாந்த், ஈஷான்யா, பிரம்மானந்தம், நாசர், ஷாயாஜி ஷிண்டே, ஓ.ஏ.கே.சுந்தர், ராஜா நடித்து இருக்கின்றனர். ஒளிப்பதிவு, அஜ்மல்கான். இசை, பப்பிலஹரி, சரண் அர்ஜூன். வரும் 12ம் தேதி ரிலீசாகும் இப்படம் குறித்து கே.சி.பொகாடியா கூறியதாவது, விபத்தில் காயம் அடைந்த நாய்க்குட்டிக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றி, ராக்கி என்று பெயர் சூட்டுகிறார் போலீஸ் அதிகாரி ஸ்ரீகாந்த். ராக்கி புத்திசாலியாக இருப்பதால், போலீஸ் துறை துப்பறியும் நாய்பயிற்சி நிலையத்தில் சேர்த்து பயிற்சி பெற வைக்கிறார். ஒருநாள் எம்.எல்.ஏ.வுடன் ஏற்படும் பிரச்னையில் ஸ்ரீகாந்த் கொல்லப்படுகிறார். பிறகு ராக்கி எப்படி கொலையாளிகளை கண்டுபிடிக்கிறது என்பது கதை.