எடை அதிகமானதால் படவாய்ப்பை இழந்தேன் – இந்துஜா !

மேயாத மான் படத்தின் மூலம் மிகவும் பிரபலமான நடிகை இந்துஜா அடுத்து ஆர்யாவுக்கு ஜோடியாக மகாமுனி படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஒரு குழந்தைக்கு அம்மா வேடம். சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், திரவம் என்ற இணைய தொடரில் வக்கீலாக நடித்துள்ளேன். இடையில் கொஞ்சம் குண்டாகி விட்டேன். இப்போது எடையை குறைக்க முயற்சி செய்துவருகிறேன். வெளிநாட்டுக்கு போய் எடையை குறைக்கவில்லை. இங்கேயே குறைத்தேன். முன்பெல்லாம் தமிழ் ரசிகர்களுக்கு கொஞ்சம் குண்டாக இருந்தால் பிடிக்கும். ஆனால் இப்போது மும்பை நடிகைகளை போல ஒல்லியாக எதிர்பார்க்கிறார்கள். கடந்த ஒரு ஆண்டில் சில படங்களை இழந்துவிட்டேன். வரும் ஆண்டுகளில் நிறைய படங்களில் என்னை பார்க்கலாம்’. இவ்வாறு அவர் கூறினார்.