எடை குறைப்பு பற்றிய ரகசியத்தை புத்தகமாக வெளியிட திட்டம் – நடிகை அனுஷ்கா

அருந்ததி படம் மூலம் தனி நாயகியாக ஜெயித்துக் காட்டியவர் அனுஷ்கா. தமிழில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா என முன்னணி நாயகர்கள் அனைவருடனும் நடித்தவர். பாகுபலி படம் உலகளவில் புகழ் அடைந்த அனுஷ்கா, இஞ்சி இடுப்பழகி படத்திற்காக எடை கூடியதால்  மீண்டும் தனது பழைய உடல்வாகைப் பெற முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வந்தார். இதனால் புதிய படவாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில், சமீபத்தில் அவர் கடற்கரையில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் வெளியானது. அதில் மிகவும் இளமையாக உடல் எடை குறைந்து மெலிந்த தேகத்துடன் அவர் காட்சியளித்தார். தற்போது அந்த ரகசியத்தை மக்களுடன் பகிர்ந்து கொள்ள முடிவு செய்துள்ளார் அனுஷ்கா. தனது எடை குறைப்பு முயற்சிகளை தன்னுடைய நியூட்ரிஷியனுடன் இணைந்து 'தி மேஜிக் வெயிட்லாஸ் பில் 'என்ற தலைப்பில் புத்தகமாக அவர் வெளியிட இருக்கிறார்.