எதிரணியை தோற்கடிக்க வேண்டும் என்பது எங்கள் எண்ணம் இல்லை – நடிகர் கார்த்தி !

சேலம் நாடக நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களை சந்தித்து நடிகர் கார்த்தி ஆதரவு திரட்டினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் சங்கம் கட்டடம் கட்டும் விவகாரத்தில் ஆணவம் இருக்கக் கூடாது என்றும், கலைஞர்களின் பங்களிப்பு மட்டுமே இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். தேர்தலில் பணபலத்தால் ஜெயிக்க முடியும் என்றால் இளைஞர்கள் போராட முன்வரமாட்டார்கள் என்றும் நடிகர் கார்த்தி தெரிவித்தார். எதிரணியை தோற்கடிக்க வேண்டும் என்பது தங்கள் எண்ணம் இல்லை, நாடக கலைஞர்களின் நலனே முக்கியம் என்று நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.