எதிர்பார்ப்பில் இருக்கும் உறியடி 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கடந்த 2016-ம் ஆண்டு வெளியான படம் உறியடி. இப்படத்தை இயக்குநர் விஜய்குமார் இயக்கி நடித்திருந்தார். அதிரடியான அரசியல் களத்தில் உருவான இப்படம் பெரிய அளவில் பேசப்பட்டது. இப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்தப் படத்தின் 2-ம் பாகம் தயாராகியுள்ளது. இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. உறியடி 2 படத்தை விஜய்குமாரே இயக்கி நாயகனாகவும் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கேரளாவைச் சேர்ந்த விஸ்மயா நடித்திருக்கிறார். 96 பட இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமையாகிறார். இந்நிலையில்  உறியடி 2 படம் வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டு வருகிறார்களாம்.