எந்திரன் 2.0’வில் நடிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியை விட இந்த நடிகருக்கு தான் சம்பளம் அதிகமா?

அடுத்த வருடம் ஒட்டுமொத்தமாக இந்தியாவே எதிர்பார்க்கும் படம் ரஜினியின் எந்திரன் 2.0 தான். இயக்குனர் ஷங்கர் தற்போது அதன் இறுதிக்கட்ட பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் ரஜினியை விட அக்ஷய் குமாருக்கு தான் சம்பளம் அதிகம் என தகவல் வெளியாகியுள்ளது. அக்ஷ்ய் குமார் ஒரு நாளுக்கு 2 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார், மொத்த தொகையை கணக்கிட்டால் ரஜினியை விட அதிகம் வரும். 2018 ஜனவரி 25ம் தேதி வெளியாகவுள்ள இந்த படம் 400 கோடி பட்ஜெட்டில் இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகிவருவது குறிப்பிடத்தக்கது.