எந்த சடங்கும் இல்லை, மக்களுக்கும் அனுமதியில்லை: தகனம் செய்யப்பட்ட கிரிஷ் கர்னாட் உடல் !

நடிகர், நாடக ஆசிரியர், எழுத்தாளர் என பல முகங்களை கொண்டவர் கிரிஷ் கர்னாட். 1938ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார். இந்தி, மலையாளம், கன்னடம், தமிழ் என பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழில் காதலன், ரட்சகன், காதல்மன்னன், ஹேராம், செல்லமே உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் கிரிஷ் கர்னாட். சமூக செயற்பாட்டாளரும் ஆவார். கர்னாடக அரசின் ஞானபீட விருதை பெற்றுள்ளார் கர்னாட். கலைத்துறையில் இவரது சாதனையை பாராட்டி மத்திய அரசு பத்மஸ்ரீ, பத்முபூஷன் ஆகிய விருதுகளை வழங்கி கவுரவித்துத்துள்ளது. 81 வயதான கிரிஷ் கர்னாட், உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரில் நேற்று காலமானார். இந்நிலையில் எந்த சாஸ்திர சம்பிராதயத்துக்கும் இடம் கொடுக்காமல், கிரிஷ் கர்னாட்டின் உடல் எந்த சடங்கும் செய்யப்படாமல் தகனம் செய்யப்பட்டுள்ளது. கிரிஷ் கர்னாட்டின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பொதுமக்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. கிரிஷ் கர்னாட்டின் உடலை அரசு மரியாதையுடன் தகனம் செய்ய அம்மாநில அரசு முடிவு செய்திருந்தது. ஆனால் அவரது குடும்பத்தினர் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டனர்.