எனக்கான ஒருவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம் தான் – திரிஷா!

சில ஆண்டுகளுக்கு முன்பே திரிஷாவுக்கும் நடிகர் ராணாவுக்கும் காதல் என்று கிசுகிசு பரவியது. பின்னர் திரிஷாவுக்கு தயாரிப்பாளர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் அந்த திருமணத்தை சில காரணங்களால் ரத்து செய்துவிட்டு நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் திரிஷா. இந்நிலையில் திருமணம் பற்றி அவரிடம் கேட்டபோது, தற்போதைக்கு நான் யாரையும் காதலிக்கவில்லை. ஆனால், எனக்கான சரியான ஒருவரை நான் சந்தித்து விட்டால் உடனே திருமணம் செய்துகொள்ள தயாராக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.