எனக்கா ‘ரெட்கார்டு’? – நடிகர் சிம்புவின் அடுத்த சர்ச்ச்சைக்குரிய பாடல்!

சிம்பு நடித்து திரைக்கு வர உள்ள ‘வந்தா ராஜாவாதன் வருவேன்’ என்ற படத்தில் அவர் பாடிய ‘ரெட்கார்டு’ என்ற பாடல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பாடல் மூலம் நடிகர் சங்க தலைவர் விஷாலுக்கு அவர் பதிலடி கொடுத்து இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி உள்ளது. சிம்பு பாடிய பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் வருமாறு:- “எனக்கா ரெட்கார்டு, எடுத்துப்பாரு ரிக்கார்டு. உள்ள விடமாட்டேன்னு சொல்லுறதுக்கு நீ யாரு. வெளியே நான் போடும் ஆட்டத்துக்கு இப்ப கூட்டத்த பாரு. பட்டத பட்டுன்னு சொன்னாக்கா, என கெட்டவன்னு சொல்றாங்க. ஓரமா போயி உட்கார்ந்தா என உத்தமன்னு சொல்றாங்க. தப்புன்னு தெரிஞ்சா டப்புன்னு கொதிக்கும் பிரச்சினை எனக்கு பாயாசம். என உரசி பார்த்தா நீ நாசம். சேத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டு போனாலும் கேட்டுல நிக்கிற ஆள் இல்லடா. நான் தனி ஆள் இல்லடா.” இவ்வாறு சிம்பு பாடியுள்ளார்.