எனக்குள் இன்னொரு ரஜினி இருக்கிறார் என்று காட்டியவர் இயக்குநர் மகேந்திரன்: ரஜினி புகழாஞ்சலி!

நடிப்பில் இன்னொரு பரிமாணத்தைச் சொல்லிக் கொடுத்தவர். 'முள்ளும் மலரும்' படம் பார்த்துவிட்டு, என்னை நடிகராக அறிமுகப்படுத்திய இயக்குநர் பாலசந்தர், உன்னை நடிகனாக அறிமுகப்படுத்தியதில் பெருமைப்படுகிறேன் என்று கடிதம் எழுதினார். அதற்கு சொந்தக்காரர் மகேந்திரன். எனக்கு மிக நெருங்கிய நண்பர் இயக்குநர் மகேந்திரன். எங்களுடைய நட்பு சினிமாவைத் தாண்டியது. மிகவும் ஆழமான நட்பு அது. எனக்குள் இன்னொரு ரஜினிகாந்த் இருக்கிறார் என்று காட்டியவர் இயக்குநர் மகேந்திரன். அவர் எப்பேர்பட்ட மனிதர் என்றால், சினிமாவிலும் வாழ்க்கையிலும் ர் மற்றவர்களுக்காக சுயமரியாதையை விட்டுக்கொடுக்காதவர். தமிழ் சினிமா இருக்கும்வரை மகேந்திரன் சாருக்கென்று ஒரு இடம் இருக்கும். அவரது ஆன்மா சாந்திடைய வேண்டுகிறேன். இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.