எனக்கு அடையாளம் 100; அதர்வா நம்பிக்கை !

டார்லிங், எனக்கு இன்னொரு பேர் இருக்கு ஆகிய படங்களை தொடர்ந்து சாம் ஆண்டன் இயக்கியுள்ள படம், 100. அதர்வா, ஹன்சிகா, யோகி பாபு, ராதாரவி நடித்துள்ளனர். வரும் 9ம் தேதி ரிலீசாகும் இப்படம் குறித்து அதர்வா முரளி கூறியதாவது,100 என்ற எண்ணுக்கு போன் செய்தால், அதை அட்டென்ட் செய்யும் காவலரின் மனநிலை எப்படி இருக்கும்? அவர் உண்மையிலேயே சம்பந்தப்பட்டவருக்கு உதவி செய்வாரா?
அல்லது அவருக்கு என்னென்ன சிக்கல்கள் என்பதை பற்றி சொல்லும் படம் இது. எனக்கு உண்மையிலேயே இது வித்தியாசமான கேரக்டர். ஒவ்வொரு ஹீரோவுக்கும் போலீஸ் படம் ஒரு மறக்க முடியாத அடையாள படமாக அமையும். அதுபோல், 100 படமும் என்னால் மறக்க முடியாத படமாக இருக்கும்.