எனக்கு இன்ஸ்பிரஷன் விஜய் சேதுபதி தான் – நடிகை கஸ்தூரி !

சலங்கை துரை இயக்கத்தில் போலீஸ் அதிகாரியாக கஸ்தூரி நடிக்கும் படம் “இ.பி.கோ 302”. இப்படத்தை செளத் இந்தியா புரொடக்‌ஷன்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கிறது. இதையொட்டி பட புரோமோஷன் வேலைகளில் பிஸியாக இருந்த நடிகை கஸ்தூரி நம்மிடையே, நான் மீண்டும் படங்களில் நடிப்பதற்கு விஜய் சேதுபதி தான் காரணம். அவர் ஹீரோவாகவும் நடிக்கிறார். வில்லனாகவும் நடிக்கிறார். பெண்ணாகவும் நடிக்கிறார், திருநங்கையாகவும் நடிக்கிறார். இப்போது அவர் தான் என் இன்ஸ்பிரேஷன். அவரை போல் தான் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன்.