எனக்கு இன்ஸ்பிரேஷன் சிவகார்த்திகேயன் சார்தான்- ‘கனா’ ஹீரோ!
சிவகார்த்திகேயன் தயாரிப்பில், பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியான படம், ‘கனா’. இதில் ஐஸ்வர்யா ராஜேஷை ஒருதலையாய் காதலிக்கும் வேடத்தில் அறிமுகமானவர், குன்னூரைச் சேர்ந்த இளைஞர் தர்ஷன். சினிமா வாடையே இல்லாத குடும்பத்தில் இருந்து வந்த அவர், என் ஃப்ரெண்டு அய்யப்பன், சிவகார்த்திகேயன் சாருக்கு ரொம்ப குளோஸ் ஃப்ரெண்டு. அய்யப்பன் மூலமாதான் சிவகார்த்திகேயன் சார் கூட பழகினேன். அருண்ராஜா காமராஜ் ‘கனா’ படத்தின் கதையை எழுத ஆரம்பிச்சார். வழக்கம்போல் அவர்கிட்டேயும் வாய்ப்பு கேட்டேன். ஸ்கிரிப்ட் புத்தகத்தை கொடுத்து படிக்க சொன்னார். முழுசா படிச்சேன். இதில் எந்த கேரக்டர் பண்றேன்னு கேட்டார். இப்ப நான் பண்ண கேரக்டரை பற்றி சொன்னேன். அவருக்கும் அது சரின்னு பட்டது. இப்படித்தான் ‘கனா’ படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷை ஒருதலையாய் காதலிக்கிற கேரக்டரில் நடிச்சேன். ஷூட்டிங் போறதுக்கு முன்னாடி பாலா என்பவர் கிட்ட ஆக்டிங் கத்துக்கிட்டேன். பிறகு சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் கம்பெனியில் ரிகர்ஸல் பார்த்தேன். எப்படி டயலாக் பேசி நடிக்கணும்னு டிரெய்னிங் எடுத்தேன். அதுக்கு பிறகுதான் ‘கனா’ ஷூட்டிங்கிற்கு தயார் ஆனேன். இப்போ படம் ரிலீசாகி எனக்கு நல்லபேர் கிடைச்சிருக்கு. அடுத்து, ‘கொடி’ டைரக்டர் துரை. செந்தில்குமாரோட உதவியாளர் ஹரீஷ் ராம் டைரக்ஷனில் ஹீரோவா நடிக்கிறேன். சிட்டி பையன் கேரக்டர். அட்வெஞ்சர் கதை என்பதால், நிறைய ஹோம் ஒர்க் பண்ணிக்கிட்டு இருக்கேன். நடிப்பு விஷயத்தில் எனக்கு இன்ஸ்பிரேஷன் சிவகார்த்திகேயன் சார்தான். பல விஷயங்களில் அவரை நான் ஃபாலோ பண்றேன். கதைக்கு திருப்புமுனையான கேரக்டரை செலக்ட் பண்ணி ஹீரோவா நடிப்பேன். ஆடிஷனுக்கு போய் நிராகரிக்கப்பட்ட அவமானங்களை நினைச்சு வருத்தப்பட்டாலும், கிடைச்சதை வெச்சு சிறப்பா வாழ முடிவு பண்ணியிருக்கேன். ஸோ, இனிமே என்னை நிறைய படங்களில் பார்க்கலாம்” என்ற தர்ஷன், இதுவரை யாரையும் காதலிக்கவில்லையாம்.