Cine Bits
எனக்கு கல்யாணத்தின் மீது நம்பிக்கை இல்லை – ஓவியா அதிரடி!
எனக்கு கல்யாணத்துல நம்பிக்கை கிடையாது. அது வேண்டாம் என்று நினைக்கிறேன் ஏன்னா வாழ்க்கை நம்மை எங்கே கொண்டுபோய் சேர்க்கும் என்று தெரியாது. நான் சின்ன வயசுல இருந்தே சுதந்திரமாக வளர்ந்த பெண் தன்னிச்சையாக செயல்படுவேன். அதனால் கல்யாணம் எனக்கு எந்தவிதத்துல பொருந்தும் என்று தெரியவில்லை. தவிர எனக்கு ஒருவரின் ஆதரவு வேண்டும் என்று இப்போது வரை தோணவில்லை. எல்லா தரப்பு கதாபாத்திரங்களிலும் நடிக்க வேண்டும். சவாலான வேடங்களில் நடிக்க தான் விரும்புகிறேன். மீடூ இயக்கம் பற்றி உங்கள் கருத்து என்ன? உங்கள் மனைவியாக இருந்தாலும் அவர் அனுமதி இல்லாமல் தொடக்கூடாது. இதுதான் என் கருத்து. இவ்வாறாக ஓவியா கூறினார்.