Cine Bits
எனக்கு சக்தி கிடைத்தால் தீவிரவாதத்தை ஒழிப்பேன் – தமன்னா!

சூப்பர் ஹூரோ ஹாலிவுட் திரைப்படமான “கேப்டன் மார்வெலின்” டிரெய்லர், சென்னை சத்யம் திரையரங்கில் வெளியிடப்பட்டது. மகளிர் தினத்தை முன்னிட்டு நடந்த இந்த விழாவில் நடிகைகள் காஜல் அகர்வால், சமந்தா, ரகுல் பிரீத் சிங், தமன்னா ஆகியோர் பங்கேற்றனர். அப்போது பேசிய நடிகை தமன்னா, தமக்கு ஒரு நாள் கேப்டன் மார்வல் சக்தி கிடைத்தால், தீவிரவாதத்தை அறவே ஒழிப்பேன் என்றார். இந்த நேரத்தில் அமைதி எவ்வளவு அவசியம் என்பதை இந்தியர்களாகிய நாம் உணர்ந்து இருப்பதாகவும் தமன்னா கூறினார்.