எனக்கு திருமணம் நடந்துவிட்டது – நடிகை மேக்னா நாயுடு !

தமிழில் சிம்புவுடன் சரவணா, சரத்குமாருடன் வைத்தீஸ்வரன் மற்றும் ஜாம்பவான், வீராசாமி, வாடா உள்பட பல படங்களில் நடித்தவர் மேக்னா நாயுடு. இந்த நிலையில் மேக்னா நாயுடு, டென்னிஸ் வீரரை ரகசிய திருமணம் செய்துகொண்டதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, எனது தந்தை டென்னிஸ் பயிற்சியாளர். அவர் மூலம் போர்ச்சுகீசிய டென்னிஸ் வீரர் லூயிஸ் அறிமுகமானார். என்னை விட அவர் பத்து வயது மூத்தவர். சமூக வலைத்தளம் மூலம் எங்கள் நட்பு தொடர்ந்தது. பின்னர் அது காதலாக மலர்ந்தது. கடந்த 2016 டிசம்பர் 25-ந் தேதி நாங்கள் இருவரும் மும்பையில் இந்து முறைப்படி ரகசிய திருமணம் செய்துகொண்டோம். எளிமையாக இந்த திருமணம் நடந்தது. அடுத்த வருடம் கிறிஸ்தவ முறைப்படியும் எங்கள் திருமணம் நடக்கும். தேனிலவு இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. சமீபத்தில் எனது கணவரிடம் திருமணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் போகிறேன் என்றேன். இதைத்தொடர்ந்து எங்கள் திருமணத்தை இப்போது எல்லோருக்கும் தெரியப்படுத்துகிறேன் இவ்வாறு மேக்னா நாயுடு கூறினார்.