எனக்கு பிடிக்காத ஒரு நிகழ்ச்சி உள்ளதென்றால் அது நிச்சயமாக பிக் பாஸ் நிகழ்ச்சி தான் – அமீர் !

மக்கள் அனைவரும், இப்பொழுது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அடிமையாகிவிட்டது போல தெரிகிறது. ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பற்றி பேசப்பேச எனக்குள் கோபம் கொப்பளிக்கிறது. அதிலும் சேரன் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் பற்றி சொல்லும் போது என் மனம் அப்படியே துடித்துப்போகிறது. நான் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பது கிடையாது. சமீபத்தில் என் நண்பர் ஒருவர், ஒரு வீடியோவை காட்டி இதை தயவு செய்து பாருங்களேன் என்று என்னிடம் காட்டினார். அதில் நான் பெரிதும் மதிக்கும் இயக்குநர் சேரனை, ஒருமையில் திட்டுகிறார். இன்னொரு பெண், அவர் என்னை தப்பான இடத்தில் தொட்டார் என்று புகார் சொல்கிறார். இதைக்கேட்டு துடித்துப்போன சேரன் கண்ணீர் வடிக்கிறார். இதையெல்லாம் பார்க்கும் போது எனக்குள் ஆத்திரம் பொங்குகிறது. நான் நினைத்தால் பிக் பாஸ் ஸ்டுடியோவையே அடித்து நொறுக்கி போட்டுவிட்டு சேரனை அழைத்துகொண்டு வரமுடியும். ஆனால் நான் அதைச் செய்யாமல் அமைதி காக்கிறேன். எனக்கு பிடிக்காத ஒரு நிகழ்ச்சி உள்ளதென்றால் அது நிச்சயமாக பிக் பாஸ் நிகழ்ச்சி தான் என்று ஆத்திரம் தீர பொங்கித் தீர்த்துவிட்டார்.