எனக்கு மிரட்டல்கள் : நடிகர் சித்தார்த் ஆவேசம்

சமூக வலைத்தளத்தில் அரசியல் சமூக விஷயங்கள் குறித்து அடிக்கடி கருத்துக்கள் பதிவிடும் நடிகர் சித்தார்த் டுவிட்டரில் ஆவேசமாக கூறியிருப்பதாவது: நான் தேவைப்படும்போதெல்லாம் அனைத்து பெரிய அரசியல் கட்சிகளுக்கு எதிராகவும் பேசி இருக்கிறேன். ஆனால் ஒரு தரப்பினரிடம் இருந்து மட்டுமே எனக்கு மிரட்டல்கள் வந்தன. அவர்கள் என் மீது வெறுப்பு காட்டினார்கள், தவறாக பேசியும் இழிவுபடுத்தினார்கள். தற்போது அவர்களில் பெரும்பாலானோர் தங்களை சவ்கிதார் என்று அழைத்துக்கொள்கின்றனர். பா.ஜனதா தொழில்நுட்ப பிரிவினர் இப்போதும் என்னை பற்றி போலியான செய்திகளை பரப்புவதை நான் படித்து வருகிறேன்.” இவ்வாறு சித்தார்த் கூறியுள்ளார். பிரதமர் தனது பெயருடன் சவ்கிதார் வார்த்தையை சேர்த்துள்ளார். அதைப் பார்த்த பா.ஜனதா கட்சி தலைவர் அமித் ஷாவும் தனது பெயருடன் சவ்கிதாரை சேர்த்தார். சவ்கிதார் என்பதற்கு பாதுகாவலர் என்று பொருள். பா.ஜனதா கட்சியின் தேசிய மற்றும் மாநில நிர்வாகிகள், மத்திய மந்திரிகள், தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் தங்கள் பெயர்களுக்கு முன்னால் சவ்கிதாரை இணைத்து டுவிட்டரில் பெயர் மாற்றம் செய்து வருகிறார்கள்.