எனது நலனில் எப்பொழுதும் அக்கறை செலுத்துவர் சமுத்திரக்கனி – அஞ்சலி

சமுத்திரக்கனி அண்ணன் எப்போதும் எனது குடும்பத்தில் ஒருவராக என் நலனில் அக்கறை கொள்வர். அதனால் இப்படத்தில் வாய்ப்பளித்த அவருக்கு நன்றி எல்லாம் சொல்ல முடியாது. நாடோடிகள் படத்தின் இரண்டாம் பாகத்தை சமுத்திரக்கனி இயக்குகிறார். இப்படத்தில் பழைய முகங்களாக சசிகுமார், பரணி மற்றும் நமோ நாராயணன் ஆகியோர் மட்டுமே உள்ளனர். மற்ற அனைவரும் கதைப்படி புதியவர்கள். அஞ்சலி மற்றும் அதுல்யா ரவி ஆகியோரும் இப்படத்தில் இடம் பெற்றுள்ளனர். படம் பற்றி அஞ்சலி நடப்பு விஷயங்களை சமூக அக்கறையோடு பிரதிபலிக்கும் படம். இப்படத்தில் எனது கேரக்டர் பெயர் செங்கொடி. இந்த படத்தில் நான் சண்டை எல்லாம் போட்டு இருக்கேன் என்று புன்னகை மலர பேட்டி கொடுத்தார்.