எனது முதல் காதல் தோல்வி – ராணா விளக்கம் !

தமிழில், அஜித்தின் ஆரம்பம், பெங்களூர் நாட்கள் உட்பட சில படங்களில் நடித்திருக்கும் ராணா, பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம், இந்தியா முழுவதும் பிரபலம் ஆனார். இந்தி படங்களிலும் நடித்துவரும் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், நிஜ வாழ்க்கை ரொம்ப போரடித்ததால் நடிப்பை தொழிலாக தேர்ந்தெடுத்தேன். நிஜத்துல செய்ய முடியாததை, சினிமாவுல செய்ய முடியும்ங்கற நம்பிக்கை. நானா எதுவும் பிக்ஸ் பண்ணிக்கலை. அதை அதன் போக்குல விட்டுடறேன். சிக்கலான கேரக்டர்கள்ல நடிக்கறது எனக்குப் பிடிக்கும். தனது காதல் அனுபவம் பற்றி கூறுகையில் காதலிக்க நேரம் இல்லை. காதல்ங்கறது அதுவாக தேடி கண்டுபிடிக்கணும்னு நினைக்கிறேன். நீங்க ஏதாவது நடக்கணும்னு கட்டாயப்படுத்தினா, அது எப்பவும் தோல்வியிலதான் முடியும். இது என் முந்தைய காதல் அனுபவத்துல கத்துக்கிட்டது’ என்று தன்னைப்பற்றி வரும் கிசுகிசுக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.