எனது முழு நடன திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு அமையவில்லை – தமன்னா !

தமன்னா சமீபத்தில் பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டியில், நான் சிறுவயதில் மாதுரி தீட்சித் நடனத்தை பார்த்து அவர் மாதிரி ஆட ஆசைப்பட்டேன். அவருக்கு நிறைய ரசிகர்கள். அதுபோல் எனக்கும் ரசிகர்கள் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அதுவே என்னை சினிமாவுக்கு இழுத்து வந்தது. நடனம் கற்கவும் தொடங்கினேன். சினிமாவில் நடனத்தை மையப்படுத்தி தயாராகும் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. என் முழு நடன திறமையையும் அந்த படத்தில் வெளிப்படுத்த விரும்புகிறேன். ஆனால் இதுவரை அந்த ஆசை நிறைவேறவில்லை.12 ஆண்டுகளாக நடிக்கிறேன். ஆனாலும் இப்போதுதான் சினிமா வாழ்க்கையை ஆரம்பித்த மாதிரி இருக்கிறது. முன்பெல்லாம் வந்த வாய்ப்புகளையெல்லாம் ஏற்றுக்கொண்டு நடித்தேன். இப்போது கதைகளை தேர்வு செய்யும் விதம் மாறி இருக்கிறது. எனக்கு நானே புதுசாக தெரிகிறேன் இவ்வாறு தமன்னா கூறினார்.