என்டிஆர் வேடத்தில் நானி .

நாக் அஸ்வின் இயக்குகின்ற  மகாநதி படம்  நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகிவருகிறது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், துல்கர் சல்மான், சமந்தா, மோகன்பாபு  உள்பட பலர் நடிக்கிறார்கள்.  இந்நிலையில் சாவித்திரி சில தெலுங்கு படங்களில் என்டிஆருடன் இணைத்து நடித்திருப்பதால் என்டிஆர்  சம்பந்தப்பட்ட காட்சிகளும்  இந்த கதையில் இடம்பெற்றிருக்கிறது. இதனால் அவரின் பேரனான ஜூனியர் என்டிஆரை  அணுகினர். ஆனால் படத்தில் சிறிது நேரமே வரும் கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்து விட்டார் அவர். இதனையடுத்து நானி இடம்  பேசியுள்ளனர். என்டிஆர் வேடம் என்பதால் நானி ஓகே சொல்லிவிட்டதாக டோலிவுட்டில் செய்திகள் வெளியாகியுள்ளது.