என்னது தமன்னாவிற்கு பிக் பாஸ் புகழ் சாக்ஷி டப்பிங் கொடுக்குறாங்களா ?

விஷால், தமன்னா நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வந்த அதிரடி ஆக்சன் திரைப்படமான ’ஆக்சன்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளரும் நடிகையுமான சாக்சி இணைந்துள்ளார். சாக்சி இந்த படத்தில் நடித்த நாயகி தமன்னாவுக்கு டப்பிங் கொடுத்துள்ளார். இன்று அவர் டப்பிங் பணியில் ஈடுபட்டிருந்த புகைப்படத்தை பதிவு செய்து இந்த தகவலையும் சாக்சி உறுதி செய்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்த நாட்களில் சரளமாக தமிழ் பேச கற்றுக்கொண்டார். இதனையடுத்தே அவர் தமன்னாவுக்காக இந்த படத்தில் குரல் கொடுத்து வருகிறார்.