என்னது பிரேம்ஜிக்கு கல்யாணமா ?

நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முகம் கொண்டவர் பிரேம்ஜி. இவர் கங்கை அமரனின் மகனும், வெங்கட் பிரபுவின் சகோரனும் ஆவார். வெங்கட் பிரபு இயக்கிய அனைத்து படங்களில் பிரேம்ஜி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு நீண்ட நாட்களாக பெற்றோர்களும், நண்பர்களும் திருமணத்திற்கு பெண் தேடி வந்தார்கள். தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில், ஆணும் பெண்ணும் திருமணத்திற்கு நிற்கும் புகைப்படத்துடன் கேம் ஓவர் என்று எழுதப்பட்ட டி.சர்ட்டை போட்டு பதிவு செய்திருக்கிறார். பிரேம்ஜிக்கு பெண் கிடைத்து விட்டது என்றும், திருமணத்திற்கு தயாராகி விட்டதாகவும் ரசிகர்கள் கமண்ட்டில் தெரிவித்து வருகின்றனர். மேலும் பலர் ஆச்சரியத்துடன் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.