என்னையும், குழந்தையையும் மறுபடியும் அடித்து துன்புறுத்தும் தாடி பாலாஜி- மனைவி நித்யா காவல் நிலையத்தில் புகார்!

பிக்பாஸ் நிகழ்ச்சியை பயன்படுத்தி தன்னுடைய குடும்பத்துடன் இணைய முயற்சித்தவர் தாடி பாலாஜி. நிகழ்ச்சி முடிந்து குடும்பத்துடன் அவர் இணைய வேண்டும் என்று மக்களே ஆசைப்பட்டார்கள். அவர்கள் ஒன்றாக வாழ்ந்து கொண்டிருந்த நிலையில் மீண்டும் தன் மனைவி நித்யா மற்றும் குழந்தையை கொடுமைப்படுத்திருக்கிறார் தாடி பாலாஜி. இதுகுறித்து காவல் நிலையத்திலும் நித்யா புகார் அளித்துள்ளார். அதில், சேர்ந்து வாழ தொடங்கிய சில நாட்கள் கழித்து மீண்டும் கணவர் குடித்துவிட்டு அடிப்பது, என்னையும் என் மகளையும் துன்புறுத்துவது, ரவுடிகள் மற்றும் அவரின் நண்பர்களை வீட்டிற்கு வரவழைத்து ஆபாச வார்த்தைகளில் என்னை திட்டி அவமானப்படுத்துகின்றனர் என்று மாதவரம் காவல் நிலையத்தில் நித்யா புகார் அளித்துள்ளார்.