என்னை இசையமைப்பாளராக அறிந்த பார்த்திபன் இந்த படத்தில் எனது நடிப்பை பார்த்து வியந்தார் !

குப்பத்து ராஜா கதையை கேட்டதுமே பிடித்தது அதனால் நடிக்க ஒப்புக்கொண்டேன். காத்தாடி விட்டு ஜாலியாக நண்பர்களுடன் சுற்றும் இளைஞனுக்கு தெரியாத வி‌ஷயங்கள் தெரிய வரும்போது எப்படி பதிலடி கொடுக்கிறான் என்பது கதை. அதிரடி படமாக தயாராகி உள்ளது. வண்ணாரப்பேட்டை கதைக்களம். காதல், குடும்ப உறவுகள், ரவுடிகள் பிரச்சினை, பகை மற்றும் வர்த்தக ரீதியிலான வி‌ஷயங்கள் படத்தில் உள்ளன. பாடல், நடனமும் சிறப்பாக வந்துள்ளது. அப்பா, மகன் பாசத்தையும் இயக்குனர் வலுவாக காட்சிப்படுத்தி உள்ளார். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் என்னை இசையமைப்பாளராக அறிந்த பார்த்திபன் இந்த படத்தில் எனது நடிப்பை வியப்போடு பார்த்து ரசித்தார். வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன். அடுத்து வரும் 100 சதவீதம் காதல், ஐங்கரன் படங்களும் வேறுமாதிரியான கதைகளாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.