Cine Bits
என்மீது தொடர்ந்து அவதூறு பிரியா வாரியர் எச்சரிக்கை!
ஒரு அடார் லவ் படம் வெளியாகி பல நாட்கள் ஆன நிலையிலும் அதில் கதாநாயகியாக நடித்த பிரியா வாரியர் மீது தொடர்ந்து விமர்சனங்கள் வருகின்றன. படம் தோல்வி அடைந்ததற்கு அவரே காரணம் என்றும் குற்றம் சாட்டுகிறார்கள். இதனால் அவர் வருத்தத்தில் இருக்கிறார். இப்படத்தின் இயக்குனர் பிரியா வாரியரை விட இரண்டாவது கதாநாயகியாக நடித்த நுரின் ஷெரிப் திறமையான நடிகை என்றும் கூறியிருந்தார். எல்லோரும் என்னை விமர்சித்து அவதூறு பரப்புவதற்கு பதில் அளித்துள்ள பிரியா வாரியர், நான் உண்மையை பேச ஆரம்பித்தால் சிலர் பிரச்சினையில் சிக்குவார்கள். அவர்களை போல் நானும் இருக்க கூடாது என்று அமைதி காத்து வருகிறேன். அவர்களை கர்மா கவனித்துக்கொள்ளும் என்று கூறியுள்ளார்.