என் சொத்துகளை அபகரித்து விட்டார் சரத்பாபு நடிகை ரமாபிரபா- நடிகர் சரத்பாபு விளக்கம்!

தமிழ் திரையுலகில் 1970 மற்றும் 80-களில் முன்னணி நடிகராக இருந்தவர் சரத்பாபு.தெலுங்கிலும் முன்னணி நடிகராக இருந்தார். இவரும், நடிகை ரமாபிரபாவும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து பின்னர் பிரிந்து விட்டனர். பின்னர் நடிகர் நம்பியார் மகள் சினேகாவை திருமணம் செய்து அவரையும் விவாகரத்து செய்து விட்டார். இந்த நிலையில் நடிகை ரமாபிரபா தனது சொத்துகளை சரத்பாபு அபகரித்து விட்டதாக ஐதராபாத்தில் பரபரப்பு புகார் கூறியுள்ளார். சினேகாவை 1990-ல் திருமணம் செய்தேன். அதற்கு முன்பு நானும் ரமா பிரபாவும் நாங்கள் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்தோம் அவ்வளவுதான் அதற்காக அவர் எனது முதல் மனைவி என்பது தவறு. நான் பிறக்கும்போதே வசதியாக இருந்தவன் மற்றவர்கள் சொத்துகளை அபகரிக்க வேண்டிய அவசியம் இல்லை. கதாநாயகனாக அறிமுகமாகி 40 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். என்னை அறிமுகப்படுத்தியவர் கே.பாலசந்தர் அப்போது ரூ.60 கோடி மதிப்பு பெறும் விவசாய நிலத்தை விற்று சென்னை உமாபதி தெருவில் ஒரு வீடு வாங்கினேன். அதில் வசிக்குமாறு ரமாபிரபாவுக்கு கொடுத்தேன். பின்னர் அந்த வீட்டை திருப்பி வாங்கிக் கொண்டேன். இதில் என்ன தவறு இருக்கிறது. எனது பெயரை கெடுக்கும் நோக்கில் ரமாபிரபா தவறான குற்றச்சாட்டுகள் கூறி வருகிறார்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.